பக்கம்:இன்றும் இனியும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கவிமணியவர்களின் பாடல்களிலும் காணப்பெறு கின்றன. இவ்வாறு மரபை விடாமல் காக்கும் சிறப்புத் தமிழ்க் கவிதைக்கு உண்டு" என்று விளக்கத்தோடு கவிமணியின் கவிதை வாயிலாகக் கையறுநிலை ஆராய்ச்சி தருவது ஒரு கட்டுரை (13). ஏட்டுக்கல்வி, கேள்விக்கல்வி, அகவுணர்வுக் கல்வி எனக் கல்வியின் படிகளைப் பகுத்துக் காட்டி, முதல் இரண்டு நிலை வேண்டாமலே அகவுணர்வுக் கல்வி பெறும் ஒதாதுணர்ந்த பெரியோர்கள் உண்டு என்பதையும் காட்டுவது ஒரு கட்டுரை. "இராம கிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியவர்களுக்கு மட்டும் இவ்வழி" உரியது; நம்மைப் போன்ற சாதாரன் மக்களுக்கு உரிய கல்வி எது? இதனைத் தெளிவுறுத்து வது இக் கட்டுரை (9). - "கவிதையில் இடம் பெற வேண்டிய சொற்கள் மிகச் சிறந்த பொருட்செறிவுடன் விளங்கவேண்டும். அடுத்து. பொருட் செறிவுடைய சொற்களாயினும் சிறந்த முறையில் அவை அடுக்கப் பெறுதல் வேண்டும்" என்று தீர்ந்த முடிவினை இரு சிறு பாடற் பகுதிகளால் விளக்குவது ஒரு சிறு கட்டுரை (2). அணிகளின் தாயகம் உவமை. பொருள் விளக்கத்திற்குக் கைகொடுக்கும் உவமை. சில சமயங் களில் உருவகமாகி உதவும். சில வேளைகளில் அப்படியும் புலவனின் உணர்வைத் திறம்பட வடித்துக் கொடுக்கச் சொற்கள் தவறிவிடுவதுண்டு; அப்போது கலைஞன் எப்படிச் சமாளிக்கிறான்? இதை முன் விளக்கமாகக்கொண்டு உவமைத் தத்துவத்தைத் தெளிவுறுத்துவது ஒரு கட்டுரை (!), உயர்ந்ததன் மேற்றே 1ளுங்காலை என்ற தொல்காப்பிய விதியை மீறியும்