பக்கம்:இன்றும் இனியும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பொதுமறை 107 எக்காலத்தும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை யன்றோ! - * - - அடுத்து அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை' என்கிறது குறள். இல்வாழ்க்கையை இத்துணைப் பெரிதுபடுத்திக் குறள் பேசக் காரணம் யாது? இறை வனுடைய படைப்பின் அடிப்படையை ஆராய்ந்தால் உலகம் முழுவதிலும் ஒரறிவுயிர் முதல் ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக அனைத்துயிர்களும் ஆண் பெண் என்ற இரு பிரிவில் வாழ்கின்றன என்பதை அறிதல் கூடும். இம் மண்ணுக்கு 'உலகம்' என்ற பெயர் நிலைக்கவேண்டுமாயின் இவ்வுயிர்கள் பல்கிப் பெருகி வாழவேண்டும். உலகில் வாழ நேர்ந்துள்ள தனிமனிதனின் எதிரே ஒற்றையாக வாழும் வாழ்வும் இரட்டையாக வாழும் வாழ்வும் இருக்கின்றன. மனிதன் எதனை விரும்பி ஏற்றுக் கொள்வது? இல்வாழ்வில் புகுவதானால் தனிமனித உரிமைகள் பலவற்றை விட்டுக் கொடுத்தேயாக வேண்டும். இதற்கு அஞ்சி அவன் தனிவாழ்வை மேற்கொள்ளுதலும் கூடுமன்றோ. அவ்வாறு பலரும் மேற்கொள்ளத் தொடங்கினால் உலகம் எவ்வாறு வாழ முடியும்? உலகம் சிறந்து வாழத்தானே குறள் அறவழி கூற வந்தது. எனவே, அந்த உலகம் நிலைபெற்று மேலும் பல்கி வளர வேண்டியது முதற்படி யன்றோ? அடிப்படை நிலையாமற் போகுமாயின் அறம் எங்ங்னம் நிலைத்து வாழ முடியும்? ஆகவேதான், அறத்தின் வழி ஒழுகவேண்டும் என்று தனிமனிதனுக்குக் கட்டளை இட்ட குறள், அடுத்த படியாக இல்வாழ்க்கைதான் அறம் என்ற கருத்தில் 'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்று பாடுகிறது.