பக்கம்:இன்றும் இனியும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அ.ச. ஞானசம்பந்தன் மனத்துக்கண் மாசில்லாத அறவாழ்வை மேற். கொண்டு, அறமேயாகிய இல்வாழ்வில் புகுந்த பொழுதுங்கூட அறனில்லாத பிறவழிகளில் மனிதன் இன்பத்தைத் தேட முற்படுவதும் உண்டு, மனத்துக் கண் மாசற்ற ஒருவன் அறவழியல்லாத பிற வழிகளிலும் இன்பம் காண முடியுமா எனின் முடியும் என்றே கூறலாம். தன் கண் காணாவிடத்துப் பிறர் துன்பப்பட்டு ஈட்டிய பொருளைத் தன் சுகத்துக்குப் பயன்படுத்துபவரும் உண்டு. பொருளைச் சேகரிப் பவர் துயரம் தன் கண்ணில் படவில்லையாகலின், 'அவர் ஈட்டித் தரும் பொருள் அறவழியால் வந்ததா என்பதுபற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும் என்று கூறகிறவர்களும் உண்டு. அதனை மறுப்பதற்கே போலும் அறந்தான் வருவதே இன்பம்' எனத் தேற்றேகாரம் தந்து பேசுகிறது குறள். இனி 'அறத்தான் வருவதே இன்பம் என்று ஏன் கட்டளை இடுகிறது குறள்? இவ்வாறு கூறவதனால் அறத்தால் அன்றிப் பிறவற்றலும் இன்பம் வருதல்கூடும் என்ற பொருளும் இத் தொடருள் அமைந்து கிடக்கிறது. என்றாலும் வருவதே என்ற தேற்றேகாரம் அறவழியன்றிப் பிறவழிகளால் வரும் இன்பம் இன்பமேயன்று என்பதும், இன்பம் போல் காட்சி யளிப்பினும் முடிவில் அவிை துன்பமாகவே முடியும் என்பதும் கூறினாராயிற்று. 'அறத்தான் வருவதே என்பதிலுள்ள 'ஏ' - காரத்திற்கு இப்பொருள் உண்டு என்பதை அறிய முடியாதவர்களும் இருப்பரன்றோ? அவர்கட்கு இன்னும் வெளிப்படையாக இதனைக் கூற தினைந்த குறள் அழக் கொண்ட் எல்லாம் அழப்போம் என்று பின்னரும் வலியுறுத்துகிறது. தனிமனிதனுடைய வாழ்வில் இன்ப நாட்டம் என்பது