பக்கம்:இன்றும் இனியும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பொதுமறை 109 மிகமிக இன்றியமையாத ஒன்று. சாதாரண மக்கள் வாழ்வின் குறிக்கோள் என்று கூறத்தக்கது. அஃது ஒன்றுதான். மனித முயற்சிகள் அனைத்திற்கும் ஆணிவேராயும் முடிவிடமாயும் அமைவது இன்ப நாட்டம் ஒன்றேயாம். உலகிடை உழன்று வாழ்பவரும், அனைத்தையும் துறந்து வாழ முற்படுபவரும் ஆகிய இருவரும் விரும்புவதும் வேண்டுவதும் இன்பம் என்ற ஒன்றையேதான். ஆதிமனிதர்களாகிய ஆதாம்', 'ஏவாள் முதலாக ஜெட் விமான கால மனிதர்கள் வரை இன்ப நாட்டங் கொள்ளாதார் யார்? நாக ரிகத்தில் மிதப்பதாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அமெரிக்கரிலிருந்து ஆஸ்திரேலியக் காடுகளில் வசிக்கும் ஆதிக்குடிகள் வரை 'இன்ப நாட்டம்' கொள்ளாதார் யார்? கால, தேச, வர்த்தமானம் கடந்து மானிட சமுதாயம் முழுவதற்கும் பொதுவாயுள்ள ஒன்று இன்ப நாட்டம் என்பதாகும். அந்தப் பொதுத் தன்மையை எடுத்துக் குறள் பேசுகிறது. உலகம் முழுவதும் அன்றும், இன்றும், என்றுமே இன்ப நாட்டங் கொண்டு இயங்குகிறது. எனவே, குறளாசிரியர் 'அறத்தான் வருவதே இன்பம் என்று குறிக்கும்பொழுது உலகம் முழுவதற்கும் எக்காலத் திற்கும் பொதுவான ஒரு நீதியை எடுத்துக் கூறுகிறார் என்றே கொள்ள வேண்டும். ன்பம் என்பது மனத்தான் அனுபவிக்கப் படுகின்ற ஒன்றே யன்றிப் புறத்திற் பெறுவது ஒன்றன்று. மூக்கு இனிய மணத்தை முகர்வதும், நா இனிய சுவையை ருசிப்பதும் இன்பம் என்று கூறப்பெறு கின்றன. ஆனால், மனம் இல்வழி இவை இல்லை. மயக்கம் உற்றவர், மனநோய் உற்றவர் ஆகியோர், நா முதலிய பொறிகள் ஒழுங்காய் அமைந்திருந்துங்கூட