பக்கம்:இன்றும் இனியும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அ.ச. ஞானசம்பந்தன் அவற்றின் பயனை அனுபவிக்க முடிவதில்லை. காரணம் யாது? மனம் அதன்வழிச் செல்லாமைதான். எனவே, எத்தகைய இன்பமாயினும் நன்கு அனுபவிக்கப்பெற வேண்டுமானால் மனத்தின் துணை இன்றியமையாதது. அந்த மனம் செம்மையுடையதாக இருந்தாலன்றி அஃது இன்பத்தை அடைய முடியாது. மனம் எப்பொழுது செம்மையுடை யதாக இருக்கும் : மனத்தில் அறம் நிலைத் திருந்தாலன்றி மனம் செம்மைப்படாது. மனத்தில் அறம் எவ்வாறு நிலைக்கும்? மனத்துக்கண் மாசில் லாது. இருத்தலே அறம் என்று குறள் பேசுகிறது. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் என்ற குறளை மறத்தலாகாது. அவ்வாறானால், மனத்துக்குரிய மாசுகள் யாவை என்று அறிந்தால்தானே அவற்றைப் போக்க முடியும். 'அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்' என்று குறள் பின்னரும் இதற்கு விளக்க உரை தருகின்றது. இவை நான்கும் மனத்துள் தோன்றும் குற்றங்களே என்று கூறத் தேவை இல்லை. இவை நான்கும் மனத்துட் புகாவழி அம் மனம் அறவழிச் செல்லும்பான்மை பெற்று விளங்கும். அத்தகைய மனத்துள் இன்பம் என்றும் நிலைபெற்று விளங்கும் என்று கூறவும் வேண்டுமோ? மனத்துள் அறம் புக முடியாமல் தடை செய்யும் மேலே கூறிய நான்கு குற்றங்களும் மானிடச் சமுதாயம் முழுவதற்கும் எக்காலத்தும் பொருந்தக் கூடியவை என்பதில் யாரும் ஐயங்கொள்ள முடியாது. எனவே, மேலே கூறிய நால்வகைக் குற்றங்களிலிருந்தும் நீங்கிய மனமே அறம் தங்கும்