பக்கம்:இன்றும் இனியும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பொதுமறை !t மனம் என்று கூறப்பெறும். இக் குற்றம் நீங்கிய வழியே அம்மனத்தில் அறம் குடிபுகும். அறத்தால் நிறைந்த மனத்தில் தோன்றும் இன்பம் நிலைத்த இன்பமாகும். இவ்வாறு அறத்திற்கு விதித்துள்ள அடிப்படை இலக்கணமும் அறவழி ஒழுகினால் ஏற்படும் நிலையான இன்பமும் அனைத்துயிட்கட்கும் எக்காலத் துக்கும் பொதுவானவை என்பதில் ஐயமில்லை. தனிமனிதன் செம்மைப்படுவதற்கு வழி வகுத்த குறள் அதனுடன் நின்றுவிடவில்லை. தனிமனிதர்கள் கூடி வாழும் சமுதாயத்தில், தனிமனிதன். கடமை யாது என்பதையும் வகுத்துக் கூறுகின்றது. விருந்தோம்பல், அன்புடைமை, இன்சொல்லுடைமை, நடுவுநிலைமை ஆகிய பகுதிகள் சமுதாயத்தில் கூடிவாழ முற்பட்ட தனிமனிதன் மேற்கொள்ளவேண்டிய பகுதிகளாகும். விருந்தோம்பலும் இன்சொலும் வீடுபேற்றைத் தரவல்லன என்று கூறப்பெற்றாலும், அவை மிகுதியும் தேவைப்படுவது சமுதாய நல்வாழ்விற்குத்தான். தன்னலத்துடன் பிறந்த தனி மனிதன் மனம் விரிவடைந்து அன்பு நிறைந்ததாக ஆக வேண்டும். மேலும், மனம் விரிவடைய வேண்டுமாயின் 'நன்மக்கட் பேறு வேண்டும். அதனையடுத்து இன்சொல் உடைமை, விருந்தோம்பல் முதலிய பண்புகளால் சமுதாயத்தில் பிறருடன் கூடிவாழும் தகுதியைப் பெறுகிறான் தனிமனிதன். தனிமனிதன் வாழ்வு செம்மைப்படுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய குறள் அவனுடைய சமுதாய வாழ்வு செம்மைப்படுவதிலும் பேரளவு கவனம் செலுத்து வதை ஆழ்ந்து நோக்கினால் அறிய முடியும். வேறு வேலை இல்லாதவர்கள் கூட்டமாக அமர்த்து கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசிப் பெர்ழுது