பக்கம்:இன்றும் இனியும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அ.ச. ஞானசம்பந்தன் போக்குதலைக் காண்கிறோம். இவ்வாறு பேசிப் போழுது போக்குவதில் பிறருக்குத் துன்பம் நேராத வழி யாதொரு தீமையும் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால், பயனில்சொல் பேசிப் பொழுது போக்கு கின்றவர்களைக் குறள் மிகவும் கடுமையாகக் கண்டிக் கின்றது. காரணம் என்ன என்று சிந்தித்தும் பார்க்க வேண்டும். 3. 'பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி வனல்' என்ற குறள் (196) இத்துணைக் கடுமையாகக் கண்டிப் பதற்குக் காரணம் என்ன? சமுதாய வாழ்வில் தனிப் பட்ட ஒருவன் தன் காலத்தை வீணடிப்பதே பெருந்தவறாகும். ஆனால், மற்றொருவனுடைய காலத்தை வீணடிக்க எவ்வித உரிமையும் ஒருவனுக்கு இல்லை. ஆனால், பயனில்சொல் பாராட்டவேண்டு மானால் தனியாக ஒருவன் செய்யமுடியாதன்றோ? மற்றொருவனை இழுத்துவைத்துத்தானே வெட்டிப் பேச்சுப் பேசமுடியும். அப்படியானால் நாம் யாரை இழுத்துவைத்துப் பேசுகிறோமோ அவனுடைய காலம் பொன்னாவதாக இருக்கலாமன்றோ? நம்முடைய தயவுக்கு அஞ்சி அவன் எழுந்துபோக முடியாமல் இருந்து நம்முடைய வெட்டிப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க நேரிடலாம். தன் காலம் வீணாவதை எடுத்துக் கூறமுடியாத சூழ்நிலையில் அவன் இருக்க லாம். எனவேதான் உட்கார்ந்து கேட்கும் அவனைக் குறை கூறகின்றது. எனவே, வெட்டிப் பேச்சுப் பேசுவதால் ஒருவன் தான் கெடுவதுமன்றி, சமுதாயத்தில் முக்கியமான ஒருவனுடைய காலத்தை யும் வீணடிக்க நேரிடுகின்றது. இதனை ஒரு சமுதாயத் தீமை (Social evil) என்று குறள் குறிப்பிடுகின்றது. ஒரு