பக்கம்:இன்றும் இனியும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பொதுமறை 113 வினாடியையும் வீணாக்காமல் உழைக்கும் மேனாடுகள் போன்ற சமுதாயத்திற்கு இக் குறள் எவ்வளவு பொருத்தமுடையது. ஆனால், நம் நாட்டவர்கட்கு இன்று தேவைப்படும் மிகச் சிறந்த நீதியாகும் இது. இக் குறளும் கால, தேச வர்த்தமானம் கடந்து அனைத்துலகுக்கும் அனைத்துக் காலத்திற்கும் பொதுவான நீதியைப் புகட்டுவதாகவே அமைந்துள்ளமை வெளிப்படை எவ்வளவு சிறந்த பண்புடையவர்கள் கூடி வாழும் சமுதாயமாயினும் ஒன்றுக்கு மேற்பட்டவர் கூடிவாழத் தொடங்கினால் தனிமனிதன் உரிமைகள் சிலவற்றை விட்டுத் தரத்தான் நேரிடும். அன்றியும் கூடிவாழும் பொழுது ஏற்படும் மன உறழ்ச்சிகளால் (Frictions) சினம் ஏற்படுதலும் உண்டு. அறிந்தோ அறியாமலோ பிறருக்குத் தீமை செய்தலும் உண்டு. உலகப் பொது அறம் பேசவந்த குறள், இந்த நெருக் கடிகளையும் மனத்துட்கொண்டு நீதி வகுத்துச் செல்கிறது. எக் காரணத்தைக் கொண்டும், எந் நிலையிலும் சினம் கொள்ளாதே என்று கூறிய குறள், அடுத்து அவ்வாறு கொள்வாயேயானால் அந்தச் சினம் பிறருக்குத் தீமை விளைவிப்பதைவிட உனக்கே கேடு பயக்கும் என்றும் கூறுகிறது. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்ற அடி எல்லா மக்கட்கும் எக் காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாகும். வில், வாள் கொண்டு போர் செய்த காலத்தும் இக்குறள் பொருந்தும். அணுகுண்டுக் காலத்தில் மிகமிகப் பொருந்தும். - சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் பிறர்மேல் சினங் கொண்டு ஒருவேளை தீமை விளைவித்தால் பிறர் இ.இ.-8