பக்கம்:இன்றும் இனியும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ல் அ.ச. ஞானசம்பந்தன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் குறள் குறிப்பிடுகிறது. இன்று சினங்கொண்டு தீமை புரியும் அவர் என்றாவது ஒரு நன்மை செய்யாமலா இருந்திருப்பார். எனவே, கொலைக்கு ஈடான தீமைகளை அவர் சினங் காரணமாகச் செய்யும் பொழுதும் என்றோ ஒரு முறை அவர் செய்த ஒரு நன்மையை நினைந்து பார்க்கவும் என்று கட்டளை இடுகிறது குறள். 'கொன்றுஅன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்' என்ற குறள் (109) தனிமனிதன் தனிமனிதனிடமும், தனிமனிதனிடம் சமுதாயமும், சமுதாயத்திடம் தனிமனிதனும் நடந்துகொள்ளவேண்டிய முறையை வகுத்துக் கூறுகிறது. இதுவரை கூறிய சில நீதிகளை , மனத்துட் கொண்டு பார்த்தால், திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தமிழ் நாட்டில் ஒரு மூலையில் தோன்றியதாயினும் தமிழ்ச் சமுதாயம் ஒன்றை மட்டும் மனத்துட்கொண்டு பேசாமல் உலக முழுவதற்கும் எக் காலத்துக்கும் பொருந்தும் அறவழிகளையே கூறிச் செல்கிறது என்பதும், உலகப் பொதுமறை என்ற பெயர் உபசார வழக்கன்றி உண்மை வழக்கே என்பதும் நன்கு புலனாகும். z