பக்கம்:இன்றும் இனியும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திரு. வையாபுரிப் பிள்ளை தமிழ்ப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளையவர்கள் இற்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளின் முன்னர் தண் பொருநை எனப் புகழப்பெறும் தாமிரவருணிக் கரையில் உள்ள சிக்கல் நரசையன் கிராமம் என்ற சிற்றுாரில் தோன்றினார்கள். 1957ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் தமிழன்னைக்குப் பெருந் தொண்டாற்றிய இவ் ஆராய்ச்சி மன்னன் இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டார். இறப்பதற்கு ஆறு நாள் முன்னர்க்கூட, உடல் பெரு நலிவுற்ற நிலையிலும், திருவாய்மொழிப் பதிப்புப்பற்றிதான் ஓயாது சிந்தித்துத் தம் நாட்குறிப்பிலும் எழுதியிருந்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் என்பவற்றோடு ஜெர்மன், ஃபிரெஞ்சு ஆகிய மொழி களையும் கற்றுத் தேர்ந்தவர் திரு. பிள்ளையவர்கள். இளமையிலேயே பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், மறைமலையடிகள், யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர் போன்ற அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது. திருநெல்வேலியில் திரு. பிள்ளையவர்கள் தங்கி யிருந்த காலத்திலேயே கம்பராமாயண ஆராய்ச்சியில்