பக்கம்:இன்றும் இனியும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அ.ச. ஞானசம்பந்தன் ஈடுபட்டார். கம்பராமாயணத்தில் பெரிதும் ஈடுபட்ட வ.வே. சு. ஐயர் அவர்களும் பிள்ளை அவர்களும் மிக நெருங்கிப் பழகியவர்கள். 1923ஆம் ஆண்டிலேயே 'நெல்லைக் கம்பர் கழகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியுள்ளார். இக் கழக விழாவில் திரு. பிள்ளை அவர்கள் 'கம்பன் திருநாள் என்ற ஒரு கற்பனைக் கட்டுரையை வாசித்துள்ளார். அக் கட்டுரையில் கம்பன் கொலு வீற்றிருக்கும் ஓர் இனிய காட்சியைக் கேட்போர் உள்ளம் குளிரச் சித்திரித்து இருக்கின்றார். "உயரிய பீடத்தின் மீது நம் கம்பர் பெருமான் எழுந்தருளி யிருக்கிறார்; அவரது திருமுகத்தே பேரறிவும், ஆழ்ந்த சாந்தியும், பெருங் கவித்வ சக்தியும் நர்த்தனம் புரிகின்றன. அவரது நயனங்கள் ஆழ்ந்து அகன்றுள்ள மனத்தையும் ஒருங்குதோற்றி விளக்குகின்றன; நோக்கு வோரையெல்லாம் வசீகரித்து அமைகின்றன. அன்பு அலை எறிந்து படர்கின்றது. அறிவு கூர்ந்து விளங்கு வதனை ஒப்ப அவரது நாசியும் நீண்டு கூர்ந்து இருக்கின்றது." இச் சொற்றொடர்கள் 1923ஆம் ஆண்டில் பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரையி லிருந்து எடுக்கப்பட்டவை. இத் தெளிவான நடை இவ. ருடைய புலமையையும் தெளிந்த கருத்தோட்டத் தையும் நமக்குக் காட்டுகின்றது. அதேநேரத்தில் நயனங்கள், கவித்வ சக்தி, நர்த்தனம் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அவருடைய இளமைக் கால எழுத்து முறையாகும். இதே பிள்ளையவர்கள் பிற்காலத்தில் இம் முறையிலல்லாமல் மிக அழகான, இனிய, எளிய தமிழ் நடையில் எழுதியுள்ளமையை அவருடைய கட்டுரை நூல்களிற் காணலாம். -