பக்கம்:இன்றும் இனியும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வையாபுரிப் பிள்ளை 117 இவர் சாதித்த மாபெருஞ் சாதனைகளுள் தலையாய இடத்தைப் பெறுவது தமிழ் அகராதிப் பதிப்பு வேலையேயாகும். 1926ஆம் ஆண்டு இவ் வேலையை ஒப்புக்கொண்டார். இவர் இப் பதிப்பு வேலையை மேற்கொண்ட பிறகு அகராதி புதிய துறையில், புதிய முறையில் உருப்பெறலாயிற்று. இவருடைய ஆங்கில அறிவு, வழக்கறிஞர் திறம், இயல்பாக அமைந்த நுண்மாண் நுழைபுலம் என்பவை இப் பதிப்பு வேலைக்கும் இவருடைய பிற தமிழ்த் தொண்டுகளுக்கும் நிலைக்களனாய் அமைந்தது போற்றற்குரியதாகும். இத்துணைப் பேராற்றல் படைத்திருந்தும் புது முறையில் விஞ்ஞான ரீதியாக இவர் தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்கியதும், அதுவரையில் உறங்கிக் கிடந்த தமிழகம் விழித்தெழுந்து பெருங் கலவரத்தை உண்டாக்கியது. அகராதி ' என்பது மேலும்மேலும் வளர்ந்து மாறுதலடையக்கூடிய ஒன்றாகும். ஏனெனில், ஆராய்ச்சி விரியவிரிய, புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரவெளிவரப் பழைய முடிபுகள் மாறும் இயல்புடையன என்ற அடிப்படை உண்மையைப் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலாமையால் குழப்பம் விளைத்தனர். மேலும், அன்றைய அரசியல் சூழ்நிலையும் சமுதாயச் சிக்கல் களும், இலக்கியம், மொழி என்பவற்றிலும் புகுந்து விளையாடத் தொடங்கின. - உலகில் மக்கள், சமுதாயமாக வாழத் தொடங்கிய நாளிலிருந்தே அவர்கள் போராட்டங் களும் புரட்சிகளும் மொழியின் அடிப்படையில் நிகழ்ந்து வந்துள்ளன. எத்துணை தூரம் ஒருவன்