பக்கம்:இன்றும் இனியும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ன் அ.ச. ஞானசம்பந்தன் விருப்பு வெறுப்பற்று விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தா லுங்கூட, மொழி என்பது மனிதனுடைய உணர்வோடு, ஒன்றிவிட்ட காரணத்தால், அம் மொழியைப்பற்றிய எவ்வகைக் கருத்தும் உணர்ச்சிகளைத் துரண்டி விடுவதாக அமைவதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆங்கில மொழியை இந் நாட்டில் பரப்புவதன்மூலமே அரசியல் வெற்றி பெறலாமென்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அக் கருத்துத் தவறானது அன்று என்பதைப் பிற்கால வரலாறு விளக்கிவிட்டது. எனவே, பிள்ளை அவர்கள் மொழிபற்றிக் கூறிய புதுக் கருத்துகள் தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்கி யதில் வியப்பு ஒன்றுமில்லை. என்றாலும், தமிழ் நாட்டில் பல கட்சிகள் தோன்றி மொழிப் பூசலில் ஈடுபட்ட அதேநேரத்தில், திரு, பிள்ளை அவர்கள் இப்பூசலில் ஒரு சிறிதும் ஈடுபடாமல், தம் கருமமே கண்ணாக, ஆராய்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொண்டாற்றினார்கள் என்பதை நினைக்கும்போது யாரும் வியவாமல் இருக்க முடியாது. அன்றைய நிலையில் 'தனித் தமிழைப் போற்று வோர் ஒருபுறமும் வடமொழியை வரம்பின்றிப் புகுத்துவோர் ஒருபுறமும் தத்தம் கொள்க்ையே சரி என வாதித்தனர். இவ்விரண்டு கட்சிகளிலும் வீண் பிடிவாதமும் உண்மை காண மறுக்கும் முரட்டுத் தனமும் அமைந்திருந்ததை பிள்ளை அவர்கள் நன்கு கண்டார்கள். தாம் கண்ட இக் கருத்தை யாருக்கும் அஞ்சாமல் விடுதலை வேண்டும் என்ற கட்டுரையில் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.