பக்கம்:இன்றும் இனியும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வையாபுரிப் பிள்ளை 19 "ஓர் இயக்கத்தால் வடமொழி வெறுப்பு நமது நாட்டில் களைபோல வளரத் தொடங்கியிருக்கிறது. வடமொழி, அந்தணருக்குமட்டும் உரியதன்று. அந்தணரல்லாதாரும், பெளத்த ஜைன சமயத்தவர் களும் அதனைப் போஷித்து வளர்த்து வந்திருக் கின்றனர். அது பாரத தேசத்திற் பிறந்த ஒவ்வொரு வனுக்கும் பொதுவுடைமை. இவ்வுண்மையை மறந்து விட்டு அந்தணர்களுக்குமட்டும் இம் மொழி உரியதாகச் சொல்லுகிறோம். இதனோடு நிற்கவில்லை. மற்றவர்களுக்குப் போலவே அந்தணர்களுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்தபோதிலும், அவர்களுக்கும் தமிழுக்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்று வாதாடுகிறோம். இவ்வாறு சொல்லுதற்கு அவர்களுள் ஒரு சிலர் இடங்கொடுக்கவும் செய்கிறார்கள்; தமிழ் தங்கள் தாய்மொழி அல்லாதது போல் ஒதுக்குகிறார் கள். தங்களை ஆரியரென்றும் மற்றையோர்கள் திராவிடரென்றும் பகுத்துக் கூறுகிறார்கள். ஆரிய-திராவிட வாதம் அர்த்த மற்றது. தனிப்பட்ட தூய ஆரியரும் திராவிடரும் இல்லையென்பது சரித்திரம் ஒப்பிய உண்மை. இந்திய தேசத்தவர்க ளெல்லோரும் ஒரே ஜாதி என்ற இலட்சியத்தைக் கைக்கொள்ளவேண்டிய இந்த நாளில், இந்த வகுப்புவாதமும் மொழி-வாதமும் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது" என்பவை அவருடைய உரைகள். 'இந்திய ஒருமைப்பாடு என்று இக் காலத்தில் வலியுறுத்தப்படும் இதே கருத்தைப் பிள்லையவர்கள் அரை நூற்றாண்டின் முன்னரே கூறியது, அவரது எதிரது நோக்கும் ஆற்றலுக்கு ஒர் எடுத்துக் காட்டாகும்.