பக்கம்:இன்றும் இனியும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 .ே அ.ச. ஞானசம்பந்தன் இந்த - இரு சாராருக்கும் நடுநிலைமையை எடுத்துக் கூறத் தொடங்கிய பிள்ளை அவர்கள், கீழ்வரும் கருத்தைத் தமிழும் சுதந்திரமும் என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்: . அறி "வடமொழி சாஸ்திரம், கலை முதலிய வற்றை அந்தண குலத்தவர் மாத்திரம் இயற்றின ரென்று கருதுவதும் பிழை. பிற சமயத்தின்ரும், அந்தணரல்லாதாரும், இந்திய தேசத்தில் தமிழ் நாட்டினர் உள்படப் பல நாட்டினரும் வட மொழி சாஸ்திரங்களையும் கலைகளையும் இயற்றியுள்ளார்கள். இம் மொழி இந்தியப் பொது மொழியாகும். இதனைத் தமிழ் மக்கள் இழப்பது தங்கள் பூர்வார்ஜிதத்தை இழப்பது போலாம். வடமொழியை நன்றாகப் பயன்படுத்துவதற்குத் தமிழுக்குப் பூரண சுதந்திரம் உண்டு." வடமொழியை வெறுப்போருக்கு இவ்வாறு வுரை வழங்கியவர், அதே நேரத்தில் அதே கட்டுரையில் தமிழை இழிவுபடுத்துவோருக்கும் தக்க முறையில் அறிவுறுத்தியுள்ளார்: "உயிர்த் தத்துவத்தோடு வழங்கிவரும் நமது தமிழ்தான் நமது தென்னாட்டில் தலைமை வகிக்கவேண்டும். வடமொழி தலைமை பூணுதல் தகாது. ஏனெனின், முதலாவது, அது இயற்கைக்கு முற்றும் விரோதம். வடமொழி வழக்கொழிந்த மொழி. அதன் வாழ்வு முடிந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இவ் வழக் கொழிந்த மொழியை, வழக்கத்தில் நின்று உயிர்த் தத்துவத்தோடு இருக்கும் தமிழ் மொழியைக்