பக்கம்:இன்றும் இனியும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வையாபுரிப் பிள்ளை ( 121 காட்டிலும் முதன்மையுடையதாகக் கொள்வது இயற்கையோடு சிறிதும் பொருந்தாதல்லவா? (வடமொழியை மாத்திரம் கற்றவர்கள் அதன் பேரழகில் மயங்கி அதற்கு அடிமையாகி, அம் மொழியிலுள்ள அபத்தக் கொள்கை களையும் கருத்துகளையும் உண்மை என்று நம்பியவர்களாய், அறிவின் எல்லைப் பரப்பு முழுவதும் அம் மொழியிலுள்ள சாஸ்திரங் களாலும் பிற நூல்களாலும் அறிந்து அளவிடப் பட்டுப் போயின என்னும் கருத்துடையவர் களாய், அறிவு வளர்ச்சியே இனி இல்லை என்னும் கொள்கையினராய் இருப்பதைக் காண் கிறோம். அவர்கள் தமிழ் மக்களாயிருந்தும் இவ்வாறு கருதுவது பெரிதும் இரங்கத்தக்கது. கேடு விளைக்கும் இப் பொய்யுணர்ச்சியை மக்கள் மனத்தில் விதைக்கும் மொழி தலைமை யிடம் வகித்தல் கூடாது) தற்கால அறிவை உதவுதற்குரிய மொழி உயிருடன் இருக்கும் தமிழ் மொழியேயாகும். அதுவே முதன்மை பெறத்தக்கது' என்ற முறையில் எழுதுகிறார். . - ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகையில் அதில் சிறிதும் கலந்துகொள்ளாமல் புறத்தே நின்று, மருத்துவன் நோயாளியைப் பார்க்கின்ற நிலையில், இரு சாராரின் இடையேயுள்ள குறைவு நிறைவு களையும் ஆராய்ந்து இவ்வாறு எழுதும் துணிவே பிள்ளை அவர்களின் மனவுறுதியை எடுத்துக் காட்டுவ தாகும். இவ்வாறு எழுதியதால் இரண்டு சாராருக்கும் ஓரளவு வேண்டாதவராகவும் ஏச்சுக்கு உரியவராகவும்