பக்கம்:இன்றும் இனியும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அ.ச. ஞானசம்பந்தன் ஆயினார் பிள்ளை அவர்கள். இவ்வளவு நடுநிலைமை வகித்த பிள்ளையவர்கள், தம் ஆராய்ச்சியில் இன்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாத முடிபுகளைத் தந்தார். அவ்வாறு இவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தாரென்றால், அதனுடைய காரணத்தை, விருப்பு வெறுப்பு நிறைந்த நிலையிலிருந்து அன்றைய நாளில் முடிவு செய்ய முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய நிலையில் நின்று, ஒட்டுமொத்தமாக அதனைப் பார்க்கும்போது ஒருசில காரணங்கள் தோன்றத்தான் செய்கின்றன. பிள்ளை அவர்கள் இப் புது முறையில் சொல் ஆராய்ச்சிய்ை, மொழி ஆராய்சியைத் தொடங்கிய காலத்தில் மொழி நூல்கள் (Philology), ஒலி நூல்கள் (Phonology), Quom £ ®)uôù (Linguistics) egêuçmçu ρόίτ@5 வளர்ச்சி அடையவில்லை. கால்டுவெல் ஐயரின் 'ஒப்பிலக்கணம்' என்ற ஒரே நூல் தவிர அத் துறையில் வேறு நூல்கள் இல்லாத அத்தகைய ஒரு சூழ்நிலையில் ஆராய்ச்சி என்பது பரந்து விரிந்து நடுநிலையுடன் செல்வதற்கு இயலாத இடமேற்பட்டது. வேண்டிய அளவு கருவிகரணங்களை வைத்துக்கொண்டு ஒன்றைச் செய்தல் என்பது வேறு தேவையான கருவி கரணங்கள் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க நினைப்பது வேறு. என்றாலும், கால்டுவெல் ஐயரின் "ஒப்பிலக்கணம்" ஒன்றையே அடியொற்றிச் சொல் ஆராய்ச்சியில் புகுந்த பிள்ளை அவர்களின் துணிவு போற்றற்குரியதாகும். - தமிழிலக்கியங்கட்குக் கோவையான சொல்லக ராதி ஒன்றும் இல்லை. நினைவாற்றலைக் கொண்டே பிள்ளையவர்கள் தம் ஆராய்ச்சியை நடத்தினார். இந்த