பக்கம்:இன்றும் இனியும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வையாபுரிப் பிள்ளை 8 123 அடிப்படையில் அவர் எழுத்துகளைப் பார்க்கும் பொழுது இம் முறையில்தான் அவர் சென்றிருக்க முடியும் என்பதும் இவரையன்றி யாரும் இத்தகைய பணியை, ஆற்றி யிருக்க முடியாது என்பதும் விளங்கும். தம் காலத்தில் கிடைத்த கருவிகரணங்களை வைத்துக்கொண்டு, விஞ்ஞான ரீதியில் மொழி ஆராய்ச்சியில் புகுந்த பிள்ளை அவர்கள், அவ் வாராய்ச்சியின் பயனாகப் பல்வேறு மெய்ம்மைகளை வெளியிட்டார். கருவிகரணங்கள் மாறுவதாலும், சுற்றுச் சூழ்நிலை மாறுவதாலும், புத்தம் புதிய மெய்ம்மைகள் கண்டுபிடிக்கப்படுவதாலும் ஒரு காலத்தில் நிறுவப்பெற்ற மெய்ம்மைகள் மாறக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அம் மெய்ம்மை கள் மாறிவிட்ட காரணத்தால் அதனை முதன் முதலாகக் கண்டுபிடித்த அறிஞர்களைத் தவறாக நினைப்பதும் கூடாது. இவர் காலத்திலும் இவருக்கு முன்னரும் ஆராய்ச்சியாளர் என்ற பெயரில் பலர் தமிழ் இலக்கிய காலத்தைப்பற்றிக் கூறிய தவறான கொள்கைகள் ஒருவாறு பிள்ளையவர்கட்கு எதிர்வாதம் செய்யும் மனநிலையை உண்டாக்கி யிருக்கலாம். மேலும், மொஹஞ்சதாரோ, ஹாரப்பா நாகரிகங்கள்பற்றிய கருத்துகளும் ஒருவாறு குழப்பத்தில் இருந்த காலம் அது. உதாரணமாக, திரு. பிள்ளை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் காணப்படுகின்ற பிராமிக் கல்வெட்டுகள் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதினார். அவருடைய 'தமிழன் மொழி, இலக்கிய வரலாறு என்ற ஆங்கில நூலில் பின்வருமாறு பேசுகிறார்: “The earliest inscription in Tamil belongs to about 5th century A.D. So we have to conclude