பக்கம்:இன்றும் இனியும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அ.ச. ஞானசம்பந்தன் that there was no Tamil literature in the accepted sense of the term in the 3rd century B.C. if we accept the dates assigned to the Brahmi Inscription. Considering all these the earliest date to which Tolkapier may be assigned is 5th century Ꭺ.Ꭰ" . பிள்ளை அவர்கள் அன்று எழுதிய நிலையில் இது உண்மையாகக் கருதப்பட்டது. ஆனால், பல்வேறு புதிய மெய்ம்மைகள் கண்டுபிடிக்கப்பெற்ற இன்றைய நிலையில் இக் கூற்றுப் பொருத்தம் இல்லாததாகும். இது கருதியேபோலும் பிள்ளையவர்கள் இதில், "ifwe accept the dates assigned to Brahmi Inscriptions” arging, கூறியுள்ளார். எனவே, அந்த அடிப்படையின்மேல் பிள்ளை அவர்கள் செய்த ஆராய்ச்சியும் அதன் முடிவுகளும் தவறாகிவிடலாம் அல்லவா? இன்று மாங்குளம், திருவாதவூர், புகளுர், ஆறுநாட்டார்மலை ஆகிய இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை உள்ளவை என்று 1924ஆம் ஆண்டிலேயே திரு. கே. வி. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் இக் காலத்தில் &3... மகாதேவன் போன்ற அறிஞர்களும் நிறுவியுள்ளனர். நெடுஞ்செழியன் பணவன் கடலன் வழுதி கொடுப்பித்த பள்ளி என்று மாங்குளம் பிராமிக் கல்வெட்டுப் பேசுகிறது. இக் கல்வெட்டு கி.மு. இரண்டாம் நூற்றாண்டினது என்றால், இதில் வரும் கொடுப்பித்த என்ற சொல் அன்றைய இலக்கியத்தில் பெருவழக்கினதாயிருந்தமையால் தொல்காப்பியரும் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளார் என்றால், அந்த நூற்றாண்டில் இலக்கியமே இருந்திருக்க முடியாது என்று பிள்ளையவர்கள் கட்டிய முடிபு வீழ்ந்து விடுமன்றோ? -