பக்கம்:இன்றும் இனியும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வையாபுரிப் பிள்ளை 125 முதலாவதாக இதே ஆங்கிலக் கட்டுரையில் திரு. பிள்ளையவர்கள், “Before the second century A.D. there must have been crude attempts at literary expressions and these attempts must have been going on for a pretty long time. Moreover, the style, the diction and metrical perfection of the Sangam poets require for their development a considerably long period. At a rough computation, we may put this period of development as three centuries.” (Page:22) அதாவது, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் தான் சிறந்த வளமுடைய சங்கப் பாடல்கள் தோன்றி யிருக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர். இரண்டாவதாக இதே ஆங்கில நூலின் மற்றொரு பகுதியில் திரு. பிள்ளையவர்கள், “Trust we are lead to conclude that the poets of the early Sangam literature, flourished from the 2nd Century A.D. to 3rd Century A.D. and that was the genuine Sangam period.” (Page:38) . . என்று கூறுகிறார். மூன்றாவதாகத் திரு. பிள்ளை யவர்கள் எழுதியுள்ள இலக்கிய தீபம்’ என்ற நூலில் திருமுருகாற்றுப்படை பற்றிய கட்டுரையில், "சுமார் கி.பி. 250-ல் நக்கீரரால் நெடுநல் வாடை இயற்றப்பெற்றிருக்கலாம். கபிலர், பாளி, கரிகாலன் முதலியோர்களெல்லாம் இந் நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்டவ ராகலாம்."