பக்கம்:இன்றும் இனியும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அ.ச. ஞானசம்பந்தன் என்றும் எழுதியுள்ளார். இம் மூன்று எடுத்துக் காட்டுகளும் திரு. பிள்ளையவர்களின் கருத்துகள் ஒரளவு மாறிக்கொண்டிருந்தன என்பதையே அறிவிக்கின்றன. ஏதாவதொன்றைப் பிடித்துக் கொண்டு விட மறுக்கும் ஒருசிலரைப் போலல்லாமல், அவ்வப்பொழுது தாம் காணும் மெய்ம்மைகளை ஒட்டித் தம் முடிபுகளை மாற்றிக்கொள்ளும் உரம் படைத்தவர் திரு. பிள்ளையவர்கள் என்பது நன்கு விளங்கும். 1922-ல் மனோன்மணியத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்ட பிள்ளையவர்கள் 1955-ல் திவ்வியப் பிரபந்தம் முதலாயிரம் பதிப்பித்தவரை: மொத்தம் 39 நூல்களைப் பதிப்பித்தார். இவற்றுள் புறத்திரட்டுப்போன்ற தமிழ்க் கருவூலங்களும் அடங்கும். கயாதரம் முதலிய நான்கு நிகண்டுகளைப் பதிப்பித்ததும், தமிழ் அகராதி பதிப்பித்ததும் திரு. பிள்ளையவர்களைச் சொல்லாராய்ச்சியில் 'பெரிய அளவுக்குச் செலுத்தியது. ஆனால், அதேநேரத்தில் மொழி நூல் நன்கு வளர்ச்சியடையாத காரணத்தால், சில மாறுபாடான முடிபுகளை அவர் எடுக்கவும் காரணமாய் அமைந்துவிட்டது. இதே காரணத்தால் தான் இரு மொழிகளினிடையே கருத்தொற்றுமை காணப்பட்டால் எந்த ஒன்றிலிருந்தும் மற்றொரு மொழிக்கு அக் கருத்துப் பரவலாம் என்ற வாதத்தைப் பிள்ளையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழிலும் வடமொழியிலும் ஒரேகருத்து இருப்பின் அல்லது ஒரு சொல் காணப்படின், அது வடமொழியிலிருந்துதான் தமிழுக்கு வந்திருக்கவேண்டுமெனத் திரு. பிள்ளை

  • மர்ரே - ராஜம் வெளியீடு