பக்கம்:இன்றும் இனியும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 • , வாழும் கவிமணி மனிதனிடம் அமைந்து கிடக்கும் அறிவு, உணர்வு என்ற இரண்டனுள் அறிவுக்கு விருந்தளிப்பவன் விஞ்ஞானி; உணர்வுக்கு விருந்தளிப்பவன் கலைஞன். எல்லாக் கலைகளும் உணர்வை இருப்பிடமாகக் கொண்டு தோன்றி அனுபவிப்பவர்கட்கும் உணர்ச்சியை நல்குகின்றன. உணர்ச்சியைத் துரண்டாத கலை அப் பெயருக்கே தகுதியுடையதன்று. நுண் கலைகள் அனைத்துமே அனுபவிப்பவருடைய உணர்ச் சியைத் துண்டுவனவாயினும், அவற்றுள் தலைசிறந்த தாகக் கருதப்படுவது கவிதைக் கலையாகும். - வடவேங்கடமுதல் தென்குமரிவரை பரவி உள்ள இத் தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே கவிதைக் கலை சிறந்து விளங்குகிறது. கிறிஸ்து பிறப்பதற்குப் பல் நூறு ஆண்டுகளின் முன் தொட்டுத் தோன்றிய கவிதைகளும் இன்று கிடைக்கின்றன. உலகில் உள்ள மிகச் சிலவான மொழிகளே இத்தகைய பெருமையை அடையக்கூடியன. என்றாலும், அவற்றுட் சில என்றுமே பேச்சு வழக்கற்றிருந்தன; இன்னுஞ் சில தம் உருவம் மாறிப் பழைய மொழி வடிவுடன் முற்றிலும் மாறுபட்டுள்ளன. தமிழ் மொழியை ஒத்த மிகமிகச் சில மொழிகளே அன்று