பக்கம்:இன்றும் இனியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் ■ເທົດສf 129 தொட்டு இன்று காறும் வடிவு மாறாமலும் ஒரளவு பழைய மரபை மேற்கொண்டும் வாழ்கின்றன. மிகப் பழையதாய புறநானூற்றில் காணப் பெறும் பல மரபுகள் மிகப் புதியனவாய்க் கவிமணியவர்களின் பாடல்களிலும் காணப்பெறுகின்றன. இவ்வாறு மரபை விடாமல் காக்கும் சிறப்பு தமிழ்க் கவிதைக்கு உண்டு. இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழருடைய வாழ்வு முறை, எண்ணம், நாகரிகம் என்பவை பெரிதும் மாறுபட்டுவிட்டன. என்றாலும் என்ன? இவை அனைத்திலும் உள்ளிடாக நிற்கும் அவர்களுடைய பண்பாடு ஒன்றாகவே இருந்துவருகிறது. இதுவே அன்று தோன்றிய தமிழ்க் கவிதையிலும், இன்று தோன்றும் தமிழ்க் கவிதையிலும் ஒரு பொதுத் தன்மையை உண்டாக்குவது. உலகில் பிறந்த மனிதன் இறந்தே தீரவேண்டிய வனாகிறான். பிறப்பு என்று தோன்றிற்றோ அன்றே இறப்பும் உடன் தோன்றிவிட்டது. இவ்வளவு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இவை நடை பெறினும் இறப்பு மனிதகுலத்திற்கு ஒரு புதிராகவே இருந்து வந்திருக்கிறது. இறப்பு என்பது அனைவருக்கும். பொதுவாயினும் இதனைக் கண்டு பலர் பலவகையில் நினைக்கலாயினர். இறப்பை அஞ்சினவர் பலர்; வெறுத்தவர் பலர்; வியந்தவர் சிலர்; வரவேற்றவர் சிலர்; அதுபற்றிக் கவலைகொள்ளாமல் இருந்தவர் மிகமிகச் சிலர் என்றாலும் இறந்துவிட்ட ஒருவரிடம் இரக்கங் கொள்ளும் இயல்பு அனைவரிடமும் காணப் படுவதொன்று. இறந்தவர் தம்முடன் தொடர்பில்லாத விடத்தும், இறந்தவரிடத்து வருத்தமும் அவர் விட்டுச் சென்றவர்களிடத்து இரக்கமும் காட்டுதல் மனிதப் இ.இ.-9