பக்கம்:இன்றும் இனியும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அ.ச. ஞானசம்பந்தன் பண்பின் பாற்படும். ஆனால், இறந்தவர் தம்முடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராயின் அதனால் உண்டாகும் பிரிவுத்துயரம் அனைவருக்கும் உரியது. ஒருவர் இறந்தபொழுது உண்டாகும் பிரிவுத் துயரம் பல காரணங்களால் தோன்றுவதுண்டு. சென்றவர் தமக்குச் செய்த பல நன்மைகளை நினைந்து இனி அத்தகைய உதவி இல்லாமற்போய்விடுமே என்று வருந்தும் வருத்தம் ஒரு வகை. இது மட்டமான தொன்று. இனி அடுத்துள்ளது சென்றவர்களுடைய நற்பண்புகளை நினைந்து பார்த்து அப் பண்புகளும் அவருடன் மறைந்துவிட்டனவே என்று வருந்தும் வருத்தம் ஆகும். ஓரளவு பண்பட்டார்மாட்டுத் தோன்றும் துயரமாகும் இது. இவ்விரண்டு வகையை அல்லாத மூன்றாவது ஒருவகையும் உண்டு. அதுவே பெரும்பான்மையான மக்களிடம் காணப்பெறுகிற தொன்றாகும். இங்குத் தோன்றும் துயரத்தின் காரணத்தை எளிதில் ஆராய முடிவதில்லை. காரணம் கருதித் தோன்றும் அன்பினால் ஏற்படும் துயரமன்று தாய் பிள்ளையினிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் காட்டும் அன்பு எக்காரணம் கொண்டு தோன்றுவது? காரணமின்றியும் இயற்கையி லேயே தோன்றுகிற இந்த அன்பு தடைப்படும் பொழுது தோன்றும் வருத்தமே மூன்றாவதாகக் குறிக்கபெற்றது. சாவும் ஒருவகைப் பிரிவுதான். பழங்காலத்தைப் பொறுத்தவரை நீண்டது.ாரப் பயணம் போவதும் ஒரு பெரிய பிரிவுதான். என்றாலும் அப் பிரிவை மக்கள் பொறுத்துக்கொண்டனர். இத்தகைய பிரிவுக்கும் பெரும் பிரிவுக்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறோ