பக்கம்:இன்றும் இனியும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிமணி 9 131 மனம் உணரும் சக்தி பெற்றிருந்தது. தலைவியைப் பிரிந்த தலைவன் பொருள் தேடவோ போர்புரியவோ சென்றான். எனில், அவன் மீண்டு வந்தாலொழிய உறுதி இல்லை. சென்ற இடத்தில் அவன் என்ன ஆயினான் என்பதை அறியவும் வழி இல்லை. அவ்வாறு இருந்தும் அப்பிரிவைக் தவறாக அக்கால மக்கள் கருதவில்லை. அத் தலைவன் பயன்படுத்திய பொருள்களைக் காணுந்தோறும் தலைவனுடைய நினைவை அவை உண்டாக்கத்தாமே செய்யும் ? இருந்தும் அப் பொருள்களை அப்புறப்படுத்தல் வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இதற்கு மறுதலையாக ஒருவன் இறந்துவிட்டால் அவன் பயன்படுத்திய பொருள்களையும் அவனுடம் புடன் அடக்கஞ் செய்யும் பழக்கமும் மிகப் பழங் காலத்திலிருந்தே வந்ததொன்று. இத் தமிழ் நாகரிகம் போலவே மிகப் பழங்காலத்தே நிலைத்துச் சிறந்த எகிப்திய நாகரிகத்திலும் இப் பழக்கம் இருந்துவந்ததை அவர்களுடைய சவக்குழிகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அவர் களுடன் புதைத்து விடுவதற்குப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் கூறும் காரணம் வேறு. அந்தப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள், இறந்தவர்கள் இப் பொருள்களை மறு உலகத்தில் பயன்படுத்துவார்கள் என்ற கருத்தால் உடன் புதைத்துவிட்டார்கள் என்ற கருதினர் ஆராய்ச்சியாளர்; எழுதியும் விட்டனர். இஃது எவ்வளவு தூரம் மெய்ம்மையானது என்பதை நாம் அறியோம். ஆனால், மக்கள் உள்ளத்தை விஞ்ஞானியைக் காட்டிலும் கண்டுணர்ந்த கவிஞன் வேறு காரணம் கூறுகிறான்.