பக்கம்:இன்றும் இனியும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிமணி • 133 எதிர்ப்பட்டால் மீட்டும். அவ் வருத்தம் மிகுதிப் படுகிறது. இஃது உலகியலில் நாம் காணும் அனுபவம். &(5āGlossingyaolo (Association of ideas) &rroróðrudfre; இறந்தவர் பயன்படுத்திய பொருளைக் கண்டவுடன் இறந்தவர் நினைவு தோன்றுகிறது. ஓரளவு மறந்துவிட்டு வேறு அலுவல்களில் ஈடுபடும் நிலையில் இப் பொருள் மறுபடியும் வருத்தத்தைத் தோற்றுவித்தலின், இப் பொருள்களை மறைத்து விடுதல் நலம் என்று கருதினர் அக்கால மக்கள். இக் கருத்தாலேயே இறந்தவர்களைப் புதைக்கும் பொழுது அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் அவர்களுடன் புதைத்துவிட்டனர் பழைய எகிப்திய மக்கள் என்று நினைப்பதில் தவறு இல்லை. - கவிமணியின் ஒப்புயர்வற்ற படைப்புகளில் ஆசிய ஜோதியும் ஒன்றாகும். அதனைப் படிப்பவர் மனத்தில் அஃது ஒரு படைப்பு (creation) என்ற எண்ணம் தோன்றுமே தவிர, தழுவல் அல்லது மொழி பெயர்ப்பு என்ற எண்ணம் தோன்றுவதில்லை. இதுவே சிறந்த கவிதையின் இலக்கணம். தமிழ் நூல்களிற் சிறந்து விளங்கும் சில, தழுவலோ அன்றி மொழிபெயர்ப்போ செய்யப்பட்டவைதாம். 'கம்பராமாயணம்', 'பெருங் கதை', 'சிந்தாமணி என்பவற்றைப் படிப்பவர் யாருடைய மனத்திலாவது 'தழுவல் என்ற எண்ணம் தோன்றியதுண்டா? கல் எந்த ஊரைச் சேர்ந்ததாக வேண்டுமாயினும் இருக்க லாம். ஆனால், சிற்பம் சிறந்துவிட்டால் கல்லைப்பற்றி ஆராய்பவர் கசடர் என்றே கருதப்படுவர். 'ஆசிய ஜோதியில் ஓர் அழகான இடத்தில் நாம் இது வரை கூறிய கருத்துகளை கவிஞர் பெருமான் கையாள் கிறார். ஒரே மகனை இழந்த தாயொருத்தி