பக்கம்:இன்றும் இனியும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 • அ.ச. ஞானசம்பந்தன் பெருவருத்தத்தில் ஆழ்ந்துவிட்டாள். மகனை இழந்து துடிக்கும் அத்தாயின் உள்ளத்தைக் கவிஞர் தாமும் ஒரு தாயாக இருந்தே வடித்துத் தருகிறார். ஒரே ஒரு வேறுபாடுதான். கவித்திறன் அற்ற ஒரு தாய் படும்பாடு ஊமையன் கண்ட கனவாக இருந்து விடும். கவிஞன் தாயாக மாறும்பொழுது அத்துயரம் கவிதை வடிவு பெற்று நம்முடைய கண்ணிரையும் காணிக்கையாகப் பெற்றுவிடும். மகனை இழந்து கதறியழும் தாயினிடத்தில் யாரோ கூறிவிட்டார்கள், 'புத்ததபிரான் ஒருவரே இக் குழந்தைக்கு உயிர்ப்பிச்சை தர இயலும் என்று. எனவே, 'நெஞ்சிற் கிடத்தி வளர்த்த அப்பிள்ளையை, விஞ்சு தவத்தில் பெற்ற பிள்ளையைத் தோளில் சுமந்து வந்து பெருமான் எதிரே கிடத்திவிட்டாள் ஆம்! காடும் மலையும் கடந்து வந்தேன் - உன்னைக் கண்டு துயர்எல்லாம் போக்க வந்தேன் வாடும் மலர்ச்செண்டு போல் கிடக்கும் - இந்த மைந்தன் உயிர்எழச் செய்யும் ஐயா ! என்று கதறுகிறாள், 'தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாய அத்தயாபரன் கருணை நிறைந்த கண் களுடன் அத்தாயை நோக்குகிறான். நிர்வான நிலையை எய்திய அக் குழந்தையைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளாமல் வருந்தும் அத்தாயின் அறியாமைக்கே இரக்கங் காட்டுகிறான் கருணை வள்ளல். ஆனால், அத் தாய்க்கு அதனை அறிய முடியவில்லை. தாயின் வருத்தத்தை ஆண்மகனாகிய அவன் அறிய முடியாதோ என்று ஐயுற்ற தாய் தன் துயரத்தை எல்லாம் கொட்டுகிறாள். w