பக்கம்:இன்றும் இனியும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிமணி 9 135 "வாய்முத்தம் தாராமல் மழலைஉரை யாடாமல் சேய்கிடத்தல் கண்டு எனக்குச் சிந்தைதடு மாறுது ஐயா ! 'பின்னி முடிச்சிடு அம்மா பிச்சிப்பூச் சூட்டிடு அம்மா என்னும் மொழிகள் இனி எக்காலம் கேட்பன் ஐயா!" என்ற முறையில் அழுகிற தாய் கூறுவதாக ஒரு பாடல் முன்னர்க் கூறிய உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அடுத்தவரும் பாடலில்தான் கவிஞர் இதுவரையும் நாம் கண்டு கூறிய உண்மையை விளக்கு கிறார். பழந்தமிழன் இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் புதைப்பதன் நோக்கம் என்ன என்பதைக் கவிஞர் கூறுகிறார் அடுத்துவரும் பாடல்மூலம். குழந்தை பயன்படுத்திய சித்திரத் தேரும் சிறு பறையும் இன்னும் வீட்டில்தான் இருக்கின்றன. குழந்தையின் பிரிவுத் துயரை மறக்க நினைத்தாலும் இவற்றைக் காணும்பொழுது தாய்மனம் தாளவில்லை. எனவே, அவற்றைக் காணுந்தோறும் அவள் படும் பாட்டைக் கூறுகிறாள்: - "சித்திரத் தேரும் சிறுப்றையும் கூடி எனைப் பித்தியிலும் பித்தி பெரும் பித்தி ஆக்குது ஐயா!" குழந்தை விளையாடின விளையாட்டுத் தேரும், விளை யாட்டு டமாரமும் அவளைப் பைத்தியமாகவே ஆக்குகின்றனவாம். இவை இரண்டையும் காணுந் தோறும் மைந்தனை மீட்டும் நினைக்கிறது. அத் தாய் மனம், முன்னர்க் கூறப்பெற்றபடி பார்த்தால் ஒழிய