பக்கம்:இன்றும் இனியும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அ.ச. ஞானசம்பந்தன் கவிஞருடைய இப் பாடலுக்குப் பொருள் அமைதி யடையாது. இறந்தவர் பயன்படுத்திய பொருள்கள் இவ்வாறு மேலும் துயரத்தை அதிகப்படுத்தும் என்ற மனநூலார் கருத்தைப் பழந்தமிழர் கண்ட உண்மையைக் கவிஞர் இவ்வாறு புனைந்துள்ளார். இத்தகைய கவிஞர்கள் இறப்பதில்லை. அவர்கள் உடல் மறைகிறது; ஆனால், அவர்கள் என்றும் நம் உள்ளங் களில் வாழ்கிறவர்கள்.