பக்கம்:இன்றும் இனியும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 1. தோற்றுவாய் சங்கமருவிய நூல்களுள் ஒன்று எனப்படும் பதிற்றுப்பத்தினுள் ஐந்தாம் பத்து, கடல்பிறக் கோட்டிய குட்டுவனை ஆசிரியர் பரணர் பாடியதாம். இக் குட்டுவனே இளங்கோவடிகளின் முன்னவன் என்ற கருத்தில் பதிகம் பேசுகின்றது. செங்குட்டு வனுடைய வீரச்செயல்கள் எனப் பலவற்றைச் சிலப்பதிகாரம் பேசுகிறது. அவ்வீரச்செய்ல்கள் பலவற்றுள்ளும் தலையாயது அவனுடைய, வடநாட்டுப் படையெடுப்பு எனக் கூறலாம். மாதவி மடந்தை கானல்பாணி கனகவிசயர்தம் முடித்தலை நெரித்தது (சிலம்பு, 27:50) என்று சிலம்பு புகழும் அதுவே செங்குட்டுவனின் வெற்றிகளுட் சிறந்தது என்பதில் தடையொன்றுமில்லை. 2. பெருவெற்றி எனினும், செங்குட்டுவனுடைய இப் பெரு வெற்றி பதிற்றுப்பத்தில் இடம் பெறாமற் போனது வியப்பே ஒருவேளை பதிற்றுப்பத்துப் பாடப்பெற்ற பின்னர், செங்குட்டுவன் வடநாடு போந்தான் என்று அமைதி கூறலாமா? அவ்வாறு கூறுவதாயினும்