பக்கம்:இன்றும் இனியும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ல் அ.ச. ஞானசம்பந்தன் அதனால் விளையும் இடர்ப்பாடுகள் பல. அவற்றுள் தலையாய ஒன்றைக் காண்போம். ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் என்று பதிகம் பேசுகிறது. சங்கப் புலவர் வரிசையில் பரணர் சாதாரணமான புலவ ரல்லர். கபிலபரணர் என்று உம்மைத் தெரகைக்கு உதாரணம் காட்டக்கூடிய அளவிற்கு இவர்கள் பெயர் கள் நாட்டவர்களால் நன்கு அறியப்பட்டிருந்தன. அத்தகைய பெரும்புலவரால் குட்டுவன் பாடப் பட்டுள்ளான். புலமை நயந்தெரி பரணர், செங்குட்டு வன் உடன்பிறந்த பெரும்புலவராகிய இளங்கோவை ஏனோ மறந்துவிட்டார்! புலமையற்றவராயினும் அரசனின் இளவல் துறவு பூண்டார் என்பது குறிக்கத்தக்க நிகழ்ச்சியாகப்படவில்லையா? சிலப்பதிகாரத்தை ஒத்த பெருங்காவியத்தைப் பின்னர்ப் பாடக்கூடிய பேராற்றல் வாய்ந்த இளங் கோவின் ஆற்றல் இளமையில் வெளிப்படாதிருந்தது என்பதும் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. பின்னர் ஏன் பரணர் இளங்கோவைப்பற்றி ஒரு குறிப்பும் தராமல் விட்டுவிட்டார்? அதுதான் போகட்டும். பதிற்றுப்பத்துப் பாடப் பட்டதன் பின்னர் இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்றே வைத்துக் கொள்வோம். அவர் ஏன் பரணரைப்பற்றித் தம் பெருநூலுள் யாண்டுங் குறிப்பிடவில்லை ? வித்துவத்காய்ச்சல் என்று பிற்காலத்தார் கூறுவது காரணமாமோ? சிலப்பதிகார ஆசிரியரிடம் இத்தகைய குற்றத்தை ஏற்ற நினைப்பதும் தீதன்றோ? பரணரைப்பற்றிப் பாட விருப்பம் இன்றேனும், தம் தமையனாகிய செங்குட்டுவன் பரணருக்குத் தந்த பரிசிலையேனுங் குறித்திருக்கலாமே அடிகள் ! ஐந்தாம் பத்தின் பதிக ஆசிரியர்