பக்கம்:இன்றும் இனியும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 8 139 கூறுகின்றபடி பார்த்தால் பரணருக்கு உம்பற்காட்டு வாரியையும், தன் மகன் குட்டுவன் சேரலையும் செங்குட்டுவன் கொடுத்தான் என்றல்லவோ ஆகிறது. இத்துணைப் பெரிய பரிசிலைத் தந்த குட்டுவனுடைய வள்ளன்மையைப் பாராட்டவில்லையே இளங்கோ அடிகள்! - 3. மாடலன் வாய்ப்புகழ் சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் பெருமை பேச வேண்டிய இடத்தில் அடிகளின் இடர்ப் பாட்டை நன்கு அறிகிறோம். தம்முடைய தமையன் புகழைத் தாமே பறைசாற்றுவது இயைபுடைத் தன்று. எனவே, மாடலன் என்ற மறையவனைப் படைக்கின்றார் அடிகள். மாடலன் கூற்றாகவும் ஏனைய பாத்திரங்களின் கூற்றாகவும் குட்டுவன் பெருமை பேசப்படினும், மாடலனே அடிகட்கு மிகவும் உகந்தவனாகக் காணப்படுகிறான். இதோ அவன் பேசுகிறான்: - "..ιιιιιιιιιιιιιιιιιιιιιι. குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே! வாழ்கநின் கொற்றம் வாழ்களின் றேத்திக் கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையில் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரி வாயில் நிலைச்செரு வென்று நெடுந்தேர்த் தானையொடு இடும்பில்புறத் திறுத்துக் கொடும்போர் கடந்து நெடுங்கடல் ஒட்டி உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் , கடும்புனல் கங்கைப் பேர்யாற்று வென்றோய்" (சிலம்பு : நடுகல் காதை)