பக்கம்:இன்றும் இனியும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அ.ச. ஞானசம்பந்தன் செங்குட்டுவன் வாகைகளை வரிசைப்படுத்த அடிகள் மாடலமறையோனையே பாத்திரமாக் கொள் கிறார். இவ் வெற்றிகளுள் நெடுங்கடல் ஒட்டிய வெற்றியையே பதிற்றுப்பத்துப் பகுதியும் பேசுகிறது. பதிற்றுப்பத்துப் பலபடியாகப் பேசும் வெற்றியை மாடலமறையோன் இரண்டே சொற்களுள் அடக்கி விடுகிறான். - t 4. கடல்வென்றி படுதிரைப் பணிக்கடல் உழந்த தாளே

  • . (பதிற்று. 41) 'தேரொடு சுற்றம் உலகுடன் மூய - மாயிருந் தெண்கடல் மலைதிரைப் பெளவத்து வெண்டலைக் குரூஉப் பிசிர் உடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே' - - (பதிற்று, 42) இனியா ருளரோநின் முன்னும் இல்லை மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பணிக்கடன் மறுத்திசி னோரே'

- - - (பதிற்று. 45) கோடுநரல் பெளவங் கலங்க வேலிட்டு உடைதிரை பரப்பிற் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் - (பதிற்று. 46) கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொடு உழந்த பணித்துறைப் பரதவ' . . . (பதிற்று. 48)