பக்கம்:இன்றும் இனியும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 141 6T6ಕT, இத்துணை இடங்களில் ஐந்தாம் பத்துப் பாடல் களினாற் பாராட்டப்பெற்ற செங்குட்டுவனுடைய கடற்போர், மாடலனால் இரண்டு சொற்களால் ஒதுக் கப்படுதல் காண்க. 5. பதிகமுறை செங்குட்டுவனுடைய வெற்றிகள் என்று சிலப் பதிகாரம் குறிக்கின்ற பலவற்றைப் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துக் குறிக்கவில்லை என்பது உண்மையே! அதனால் பரணர் குறித்த குட்டுவனும் இளங்கோ குறித்த குட்டுவனும் வெவ்வேறானவர் என்று நிலை நாட்ட முற்படுகின்றனர். அவர்கள் காட்டும் முடிவை ஏற்றுக்கொள்வதாயினும், காட்டப்பெறும் காரணங் கள் நேர்மையுடையனவாகத் தெரியவில்லை. ஆனால், இவ்வழி மேற்கொள்பவர் பதிகப்பாட்டில் குறிக்கப் பெற்றுள்ள செய்திகளில் சிலவற்றை மறுத்துவிட்டுச் சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். ஒவ்வொரு பத்தின் பின்னரும் காணப்படும் பதிகங்களே அப் பத்தைப் பாடினவர் பெயர், அப் புலவர் பெற்ற பரிசில் முதலியவற்றைக் குறிக்கின்றன. ஐந்தாம் பத்தில் காணப்பெறாத குட்டுவன் செயல்கள், பரணராற் பாடப்படாத செயல்கள், ஏன் பதிகத்தில் இடம்பெற்றன? பரணர் கூறாச் செயல்கள் பதிகத்திலிருப்பதால் பதிகம் பொய்யுரைக்கின்றது: சிலப்பதிகாரத்திலிருந்து தன் கருத்துகளைப் பதிகம் க்டன் வாங்குகிறது. இன்றேல் சிலப்பதிகார ஆசிரியரே பதிகத்தையும் பாடி இருக்கலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள் சில அறிஞர்கள். . பரணர் குட்டுவன் காலம் முழுவதும் வாழ்ந் திருந்தார்; அவனுக்குப் பின்னரும் வாழ்ந்திருந்தார்.