பக்கம்:இன்றும் இனியும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ல் அ.ச. ஞானசம்பந்தன் எனவே, அவர் குட்டுவனுடைய வீரச்செயல்களாகச் சிலவற்றைக் கூறவில்லையாயின், அவை அவர் காலத்து நிகழவில்லை என்பதே முடிபென்று கூறு கிறார்கள். இவ்வாறு கூறுவதால் உண்டாகும் இடர்ப் பாட்டைப் பின்னர்க் காண்போம். இவ்வளவு கருத்துவேற்றுமைக்கும் காரணம் பதிகம்தானே! பதிகம், புனைந்துரை பல கூறுகிற தாகலின் அதனை முழுவதும் ஒதுக்கிவிடுவதே முறை. பதிகத்தை முற்றிலும் ஒதுக்கிட அவர்களும் முனைந்து நிற்பர். ஆனால், ஒரு சிறிய இடையூறு! பதிகத்தை ஒதுக்கிவிட்டால் ஐந்தாம் பத்தை யார் பாடினார் என்பதை அறிய முடியாதே! பரணர் பாடினார் என்று கூறுவதே பதிகத்தின் துணை கொண்டுதானே! பதிகம் கூறும் பல செய்திகளை நாம் மறுத்து இதுவொன் றினை மட்டும் ஏற்றுக் கொள்வது யாங்ங்னம்? ஒரே பாட்டில் தமக்குத் தேவையானதை மட்டும் ஏற்றுக் கொண்டு ஏனையவற்றை ஒதுக்குவது திறனாய்வு முறையன்று. பதிகம் முழுவதையும் ஒதுக்கும்பொழுது பரணரும் ஒதுங்கிவிடட்டும். பதிகம் கூறும் செய்திகள் நம்பத் தகுந்தனவாக இல்லை என்பதும், நூலுட் கூறப் பெற்றவற்றிற்கும் பதிகம் கூறுவதற்கும் மாறுபாடுகள் உள்ளன என்பதும் உண்மைதாம். பின்னர் வழி யாது? பதிகம் யாரோ ஒருவரால் பிற்காலத்தில் எழுதப் பெற்றது என்பதை அனைவரும் நம்புகின்றனர் இந்தப் பதிகங்களை நம்பிக்கொண்டு தாமே பாடினோர் பற்றிய வரலாறுகளும் தொங்குகின்றன. "கெடலருந் தானையொடு கடல்பிறக்கோட்டிய செங்குட்டு 157ஆம் பக்கத்தில் சேரர் மரபு என்னும் தலைப்பைக் காண்க.