பக்கம்:இன்றும் இனியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து $ 143 வனைக்கரணம் அமைந்த காசறு செய்யுட் பரணர் கூறுகிறது. இது தவிர உள்ளேயுள்ள பாடல்களில் யாண்டும் யார் பாடினார் என்று கூறத்தக்க சான்றுகள் ஒன்றும் இல்லையே! எனவே, பரணரே இதனைப் பாடினார் என்று கொண்டு ஆய வேண்டிய கடப்பாடு யாது? - இப் பதிகங்கள் அனைத்தும் ஒருவரே பாடி யுள்ளார் என்பதும் அனைவரும் ஒப்புகிற ஒன்றுதான். எனவே, ஒரு பதிகம் அடிபட்டால் ஏனையபதிகங் களும் நில்லா. இப் பதிகங்களைக் கொண்டு சேரர் மரபுமுறை கூறுவதும் பொருந்துமாறில்லை. இவற்றை நம்பி மரபுமுறை கூறப்புகுந்து இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் மகன் கடல்பிறக் கோட்டிய குட்டுவன் என்று கொள்கிறார்கள். இம்மரபிற் சேராத அந்துவஞ் சேரலிரும் பொறை மரபில் செல்வக்கடுங்கோவாழி யாதன் என்றொருவன் வருகிறான். இவ் விரு மரபினரும் அடுத்தடுத்து ஆட்சி செய்தனாரா என்று அறியவும் வாய்ப்பில்லை. இவர்களுள் உள்ள உறவு முறை யாது என்றும் பதிகந் தவிர வேறு வழியால் அறிய இயலவில்லை. ஆனால், செங்குட்டுவனைப் பரணரும், செல்வக்கடுங்கோவைக் கபிலரும் பாடிய தாகப் பதிகங்கள் கூறுகின்றள. 6. கபிலபரணர் - வேறு ஆதாரங்கள் கொண்டு கபிலரும் பரணரும் ஒரு காலத்தவரென முடிவுசெய்ய முடிகிறது. அவ்வாறாயின், இவ்விரு வேறு அரசர்களையும் சமகாலப் புலவர்களாகிய இவ்விருவரும் எவ்வாறு பாடினர்: அன்றியும், இப்பதிகங் கூறும் உறவுமுறை