பக்கம்:இன்றும் இனியும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அ.ச. ஞானசம்பந்தன் உண்மையானால், இரண்டாம் பத்தின் சேரலாதனுக்கு மூன்றாம் பத்தின் செல்கெழு குட்டுவன் தம்பி யென்றும், நான்காம் பத்தின் நார்முடிச் சேரல் ஒரு மகன் என்றும், ஐந்தாம் பத்தின் குட்டுவன் இரண்டாம் மகன் என்றும், ஆறாம் பத்தின் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மூன்றாம் பத்தின் செல்கெழு குட்டுவன் தம்பியென்றும், நான்காம் பத்தின் நார்முடிச் சேரல் ஒரு மகன் என்றும், ஐந்தாம் பத்தின் குட்டுவன் இரண்டாம் மகன் என்றும், ஆறாம் பத்தின் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் மூன்றாம் மகன் என்றும் ஆகிறது. . ஐந்தாம் பத்தைப் பாடிய காசறு செய்யுட் பரணர் எனப்படுபவர் அப்பத்தின் தலைவனுக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் உண்டென்பதை ஏனோ பாடவில்லை? இளங்கோ என்ற ஒரு தம்பி இருந்தது கற்பனை என்று அறிஞர் முடிவு கட்டினாலும் நார்முடியானையும் ஆ. சேரலாதனையும் ஏன் பாடவில்லை? இவர்களிருவரும் முறையே 4, 6 ஆம் பத்துகட்குரிய பெருமைவாய்ந்தவர்களாயிற்றே! இருவருடைய வெற்றிகளும் 4, 6 ஆம் பத்துகளிற் புகழப்படுகின்றனவே. தந்தை, தம்பி மக்கள் மூவர் என்ற முறைவைப்பு உண்மையா யிருக்குமாயின், ஒரு வரைப் பற்றிய குறிப்பு மற்றவற்றில் ஏன் வரவில்லை? ஐந்தாம் பத்துப் பாடும்பொழுது பரணர் இவர்களை மறந்துவிட்டாலும், தாம் பாடிய பிற பாடல்களி லேனும் குறிப்பிட்டிருக்கலாமே! ஊர் பெயர் தெரியாத சிற்றரசர்களை யெல்லாம் பாடும் பரணர் ஏன் இவர்களைப்பற்றி ஒரு குறிப்பும் தரவில்லை? எனவே, பதிகங்களை நம்பி இவ்வுறவுமுறை கூறுதல் அத்துணைப் பொருத்தமுடையதா என்பதும் ஆய்தற் குரியது. r