பக்கம்:இன்றும் இனியும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து $ 145 7. திறனாய்வு இலக்கியத் திறனாய்வு முறை இக்காலத்தில் வளர்ந்துள்ளது; ஒரு கவிஞனுடைய சில பாடல்கள் கிடைக்குமாயின் அவற்றைக் கொண்டு அவன் பெயரில் வழங்கும் பிற பாடல்களை ஒரளவு ஆயலாம். இம்முறையில் காணின் பரணருடைய பாடல்கள் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய தொகுப்புகளிற் காணப் பெறுகின்றன. பதிற்றுப் பத்து நீங்கலாகப் பரணர் பெயரில் காணப்பெறும் பாடல்கள் 75. புறத்தில் 13-ம், அகத்தில் 34-ம், குறுந் தொகையில் 16-ம் நற்றிணையில் 12-ம் அவராற் பாடப் பெற்றவை என வழங்குகின்றன. r இவை அன்ைத்திலும் காணப்பெறும் நடைக்கும் பதிற்றுப்பத்தில் காணப்பெறும் நடைக்கும் வேறுபாடு உண்டா என்று காண்டல் வேண்டும். மேலும், இப் பாடல்களிற் கூறப்பெறும் பிற செய்திகளையும் ஆய்தல் வேண்டும். பதிற்றுப்பத்தில் அவர் பாடிய மன்னனின் சிறப்பியல்புகளை வேறு இடங்களில் நினைவு கூர்ந்துள்ளாரா என்றுங் காண்டல் வேண்டும். 8. பாட்டொப்பு சங்க நூல்கள் ஓரளவு பயிற்சி உடையாரும் ஓர் உண்மையை எளிதில் அறியலாம். ஏனைய சங்கப் பாடல்களின் நடைக்கும் பதிற்றுப்பத்தின் நடைக்கும் வேறுபாடு மிக்கிருத்தலைக் காண்டல்கூடும். அகப் பட்ட எட்டுப் பத்துகளையும் பாடியவர்கள் எனப் பதிகம் கூறும் புலவர்களின் பெயரால் பிற பாடல் களும் உளவே. சங்கப்பாடல் தொகுப்பில் மிகுதியான பாடல்களைப் பாடிய கபிலர் பெயரால் ஒரு பத்தும், இ.இ.-10