பக்கம்:இன்றும் இனியும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ல் அ.ச. ஞானசம்பந்தன் கபிலரின் அடுத்த படியில் நிற்கும் பரணர் பெயரால் ஒரு பத்தும் காணப்பெறுகின்றனவே. பரணருடைய புறம், அகம், குறுந்தொகை, நற்றிணைப் பாடல்களை யும் படித்துவிட்டுப் பதிற்றுப் பத்துப் பாடல்களையும் உடன் படித்தால் என்ன தோன்றுகிறது? பரம்பரை யாகக் கூறிவந்த முடிவுகட்கு எதிராக நினைக்கவும் அச்சம் ஏற்படுகிறது. ஆனால், வேறுபாட்டை வெளிக் கூற எத்துணை அஞ்சுபவர்கட்குங்கூட இப் பாடல்களின் இடையேயுள்ள வேறுபாடு புலனாகாமற் போகாதே! ஏனைய பாடல்களிற் காணப்படும் ஒசை நயமும், சொல்லாட்சிச் சிறப்பும் ஐந்தாம் பத்தில் காணப்படுகின்றனவா? பதிற்றுப்பத்தில் அதிகம் பயிலாமல் பரணருடைய பிற பாடல்களில் மிக்குப் பயின்ற ஒருவரிடம் ஐந்தாம் பத்தின் சில பாடல். களைக் காட்டினால் இவை பரணர் பாட்டு என்று கூறுவாரா? பதிற்றுப்பத்துப் பாடல்களைப் படிக்கும் பொழுது வேண்டுமென்றே பிடிவாதத்திற்குப் பாடின வைபோல ஒர் உணர்ச்சி தோன்றக் காரணம் யாது? பதிற்றுப்பத்துப் பாடல்கள் புறப்பாடல்கள் தாமே! சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போரிட்டு இருவருமே போர்க்களத்து வீழ்ந்தார்களாம். இருவரும் இறந்தமை குறித்துப் பரணர் பாடிய பாடலைக் காண்க. இங்குப் பரணராற் பாடப் பெற்ற குடக்கோ நெடுஞ்சேரலாதன் யார்? இவனே இரண்டாம் பத்தின் தலைவன் என்று எளிதாகக் கூறிவிடுகிறார்கள். அவ்வாறாயின், அவன் சாவிற்கு இத்துணைக் கவலைப்படும் பரணர் குட்டுவனைப் பாடும் பொழுது ஏன் இதுபற்றிக் கூறவில்லை?