பக்கம்:இன்றும் இனியும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து $ 147 "எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே; விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம் மறத்தகை மைந்தரோ டாண்டுப்பட் டனவே, தேர்தர வந்த சான்றோர் எல்லாம் தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே, விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத் தொழிந்தனர்; இனியே என்னா வதுகொல் தான்ே - கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித் தண்புனற் பாயும் யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கைஅவ ரகன்றலை நாடே ?" (புறம் 63) இனிப் பரணர் பாடியதாகக் கூறப்பெறும் ஐந்தாம் பத்தின் ஏழாம் பாடலும் கீழே தரப்படுகிறது. இவை இரண்டின் ஓசை, சொல்லாட்சி, இழும் (ythm) என்பவற்றிடைக் காணப்பெறும் வேறு பாட்டையுங் காண்க. அட்டானானே குட்டுவன்; அடுதொறும் பெற்றா னாரே, பரிசிலர் களிறே; வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து வளிமுனை அவிர்வருங் கொடிநுடங்கு தெருவில் சொரிகரை கவரும் நெய்வழிபு உராலின் - பாண்டில் விளக்குப் பரூஉச் சுடரழல நன்னுதல் விறலிய ராடும் - தொன்னகர் வரைப்பின் அவனுரையா னாவே!" (பதிற்று. 47)