பக்கம்:இன்றும் இனியும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அ.ச. ஞானசம்பந்தன ‘Style reveals the man' arcărp Lp(Suomo op/airG மேனாட்டில், தனித்து இரண்டு பாடல்களை மட்டும் எடுத்துக் காண்பதால், இவற்றிடை வேறுபாட்டை நன்கு காண முடியாமலும் இருக்கலாம். பல பாடல்களையும் ஒரே நேரத்திற் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். 9. கடற்போர் கூறாமை இது ஒருபுறம் இருக்கப் புறம் 369ஆம் பாடல் கடல் பிறக்கோட்டிய வேல் கெழுகுட்டுவனைப் பரணர் பாடியதாக அமைந்துள்ளது. அப் பாடல் முழுவதும் அவனுடைய போர்த்திறமையை வியந்து பாராட்டுவதுதான்; எனினும், என்ன வேற்றுமை ? குட்டுவனுக்கு அடைமொழியாக அமைந்த கடற் போரைப் பற்றி இப் பாடல் ஒரு வரியாயினும் கூற வில்லை! அவன் செய்த நிலப்போரையே பாராட்டு கிறது இப்பாடல். "பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு கணநரி யோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளம் தழிஇ பாடுநர்க் கிருந்த பீடுடை யாள " - - (புறம். 369) பதிற்றுப்பத்தில் குட்டுவன் மிகுதியாகப் போற்றப் படுவது அவன் செய்த கடற்போரின் பொருட்டேயாம். 'படுதிரைப் பனிக்கடல் உழந்த தாளே (பதிற்று. 41) "மாயிருந் தெண்கடன் மலிதிரைப் பெளவத்து வெண்டலைக் குரூஉப்பிசி ருடையத் தண்பல வரூஉம் புணரியிற் பலவே (பதிற்று. 42)