பக்கம்:இன்றும் இனியும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 9 149 "பிணம்பிறங் கழுவத்துத் துணங்கை யாடி முழங்குதிசைப் பணிக்கடல் மறுத்திசி னோரே? (பதிற்று. 45) 'கோடுநரல் பெளவங் கலங்க வேலிட்டு உடைதிரை பரப்பிற் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவன்' (பதிற்று. 46) என்ற எடுத்துக்காட்டுகளால் அவனுடைய கடற் போர்ப் பெருமை பேசப்படுகிறது. இப்பாடல்களில் அவனுடைய பிற போர்களும் பேசப்பட்டாலும், அவன் கடற்போரே அதிகச் சிறப்பு வாய்ந்தது என்பதை 45ஆம் பாடல் தெளிவாகக் கூறுகிறது. 'சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல் அனைய பண்பின் தானை மன்னர் இனியா ருளரோ ? நின் முன்னும் இல்லை' என்ற அடிகள் இக் கருத்தை வலியுறுத்தும். இத்துணைப் பெருமையுடையதாகப் பதிற்றுப் பத்தில் பாராட்டப்படும் இக் கடற்போர் புறநானூற்றிற் காணப்படும் குட்டுவன்பற்றிய ஒரே பாடலிற் பேசப்படாதது வியப்பினும் வியப்பே! இது ஒருபுறம் நிற்க, பரணரால் புறம் முதலிய நூல்களிற் பாடப்பெற்ற 75 பாடல்களில் எத்துணைச் செய்திகள் இடம்பெறுகின்றன? ஒருமுறை இப்பாடல்களைப் படிப்பவரும் இப் புலவர்பெருமானின் பரந்துபட்ட அறிவையும் நுண்மாண் நுழ்ைபுலத்தையும் பாராட் டாமல் இருத்தல் இயலாது. தம் காலத்தும் தமக்கு முற்காலத்தும் வாழ்ந்த மன்னரைப்பற்றியும் அவர்களுக்கும் நிகழ்ந்த போர்களைப் பற்றியும் இவர்