பக்கம்:இன்றும் இனியும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ல் அ.ச. ஞானசம்பந்தன் கூறும் செய்திகள் படிப்பார்க்கு வியப்பை விளக்காமல் இரா. மருதத்திணையை மிகுதியும் பாடுபவர் பரணராகலின், அவரைப் பேசும்பொழுதெல்லாம் இரண்டு அரசர் போரிட்டதைக் குறிப்பிட்டு, 'அப்பொழுதெழுந்த ஆர்ப்பினும் பெரிதால் இவ் வலர்' என்று குறிப்பிடுகிறார். 10. பரணரால் பாடப்பெற்றவர் இவரால் குறிக்கப்பெறும் அரசர்பற்றி ஒரு சிறிது காண்பாம். ஆட்டனத்தி, ஆதிமந்தி வரலாற்றை மிகுதியாகப் பாடுகிறார். அகநானூறு 76, 135, 236, 376, 396 பாடல் களில் இந் நிகழ்ச்சி பேசப்பெறுகிறது. இதனையடுத்து அன்னி மிஞ்சிலி என்பானை இவர் கூறுவதைப் பார்த்தால், அவன் காலத்தேதான் இவர் வாழ்ந்தாரோ என்றும் நினைக்கவேண்டியுளது. அவனை அகநானூறு 142, 181, 262, 396 பாடல்களிலும், நற்றிணை 265ஆம் பாடலிலும் குறிப்பிடுகிறார்; அடுத்துக் கரிகாலனை அகம் 125, 135, 246, 376 பாடல்களிற் குறிப்பிடுகிறார். இவர்கள்பற்றி மிகுதியான குறிப்புகள் வருகின்றன எனினும், பிறரும் பலர்பற்றியும் குறிப்புகள் வருகின்றன. பழையன்பற்றி அகம் 186,226-லும், அஃதை பற்றி அகம் 76, குறுந்தொகை 298-லும்; தித்தன் பற்றிப் புறம் 352, அகம் 122, 152, 226-லும்; திதியன் பற்றி அகம் 196, 322-லும்; நன்னன்பற்றி அகம் 152,356, குறுந்தொகை 73, 292, நற்றிணை 272-லும் அதிகன்பற்றி அகம் 162-லும்; பேகன்பற்றி அகம் 262, புறம் 141, 142-லும்; பசும்பூண் பாண்டியன் பற்றிக் குறுந் 393-லும்; எவ்வி பற்றி அகம்