பக்கம்:இன்றும் இனியும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து $ 151 266, குறுந் 19-லும் அழிசிபற்றிக் குறுந் 258-லும்; ஓரி பற்றி நற்றிணை 6, 265-லும்; தழும்பன்பற்றி நற்றிணை 300 -லும், பாணன், கட்டி என்பவர்பற்றி அகம் 226-லும்; உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி பற்றிப் புறம் 4-லும், குடக்கோநெடுஞ்சேரலாதன் பற்றிப் புறம் 63-லும் பாடுகின்றார். குறைந்த அளவு இருமுறையும், நிறைந்த அளவில் ஆறு இடங்களிலும் ஒவ்வொருவரும் பேசப்படுகின்றனர். . இத்துணைப் பேர்களைப்பற்றி ஒடுகிற ஒட்டத்தில் குறிப்பிட்ட பரணர் பெருமான் குட்டு வனையும் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் ஒரே ஒர் இடத்தில் - அங்குதான் - அவனுடைய கடற்போர் பேசப் படுகிறது. அது வருமாறு: - "படைநிலா இலங்குங் கடல்மருள் தானை. மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஒங்குதிசைப் பெளவம் நீங்க ஒட்டிய நீர்மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் கூர்மதன் அழியரோ நெஞ்சே! (அகம். 212) 11. பண்டைச் செயல் குட்டுவன் என்ற பெயரும் அவன் கடல் பிறக் கோட்டிய செய்தியும் இப்பாடலின்கண் தெளிவாகப் பேசப்படுதல் உண்மைதான். ஆனால், 'ஒட்டிய நீர்மாண் எஃகம் என்ற தொடர் கூர்ந்து நோக்கற் குரியது. பண்டொருநாள் நடைபெற்ற செயலைக் குறிப்பதுபோல் அமைந்துள்ளன அல்லவோ இச்சொற்கள்! இவ்வொரு முறை குட்டுவன் செயலைக்