பக்கம்:இன்றும் இனியும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அ.ச. ஞானசம்பந்தன் குறிப்பிட்டது தவிர மேலே குறிப்பிட்ட வரிசையில் குட்டுவன் பெயர் யாண்டுங் குறிப்பிடப்படவில்லை. தாம் பாடிய 34 அகப்பாடல்களில் ஆறு இடங்களில் அன்னி மிஞலியைக் குறிப்பிட்ட பரணர் ஏன் குட்டுவனை ஒரே இடத்தில் மட்டும் குறிப்பிட வேண்டும்? பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து இவர் பாடியதாகவிருப்பின் அத்துணைப் பெரிய சிறப்பு இன்னும் பலவிடங்களிற் குறிக்கப்பெற்றிராதா? ஆதிமந்திக்கும் கரிகாலனுக்கும், ஏன் பெண் கொலை புரிந்த நன்னுக்கும் கொடுத்த அளவுகூடக் குட்டுவன் பெறாமற்போனது ஏன்? மோகூர்ப் பழையனைப் பரணர் அகம் 186, 326 பாடல்களிற் குறிப்பிடினும், குட்டுவன் அவனை வென்றதைக் கூறினாரல்லர். இவ்வொரு பாடலில் குட்டுவனைக் குறிப்பிட்ட காரணத்தால் அவன் காலத்தேதான் பரணர் வாழ்ந் தார் என்று வாதிட்டால், அவரால் குறிக்கப் பெற்ற மேலே கூறப்பெற்ற அனைவரும் சமகாலத்தவர் என்றே கருத நேரிடும். . இக் குறிப்புகளும் இருவகைத்து. ஒரு மன்னனுடைய பெயரைக் குறிப்பிட்டு அவனுடைய இன்ன ஊரை ஒத்த இவள் நலம் கெடினும் என்று வரு மிடங்கள் உறுதியாக ஒன்றை அறிவுறுத்தும். புலவர்கள் ஒர் ஊரைக் குறிப்பிடும்பொழுது அப்பொழுது வாழும் மன்னனைக் குறிப்பிடுவார்களே தவிர, முன்னர் வாழ்ந்த மன்னனைக் குறிப்பிடுதல் மரபன்று; முறையுமன்று. 12. உவமை காட்டும் உண்மை “பல்வேல் மத்தி கழாஅ ரன்ன" (அகம் 6) ". . . . . . . . . . . . . . பொறையன் - - அகல் இருங்கானத்து கொல்லி போல' (அகம்: 338)