பக்கம்:இன்றும் இனியும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்புத்தில் ஐந்தாம் பத்து 153 நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல்முதிர் புறங்காட்டு அன்ன. (அகம்: 122) “சுடர் மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்து." (அகம்: 69) “பழையன், காவிரி வைப்பிற் போஒர் அன்ன." - (அகம்: 186) "அன்னி மிஞிலியின் இயலும்." (அகம்: 196) "ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பின் கவிரம் பெயரிய உருகெழு கவாஅன" (அகம்: 198) "ஒரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி." - (அகம்: 208) "பேகன், கொண்டல் மாமலை நாறி." (அகம்: 262) இவ் வுவமைகள் அனைத்தும் ஒவ்வோர் ஊரைப் பற்றியும் அதனோடு தொடர்புடைய அரசனைப் பற்றியுங் கூறலான், புலவர் தம் காலத்து வாழ்ந்த அரசனையே குறிக்கின்றார் என்று கூறத் தடை யாது? தம் காலத்து வாழும் அரசனை விட்டுவிட்டு முன்னர் வாழ்ந்த அரசன் பெயரொடு ஊரைச் சேர்த்துப் புலவர் கூறினார் என்றல் பொருந்தாதன்றோ? எனவே, ஊருடன் சேர்த்து ஒர் அரசனைக் குறிப்பிட்டு அவ்வூரை ஒத்த அழகு என்று புலவர் கூறினால், அவ்வரசன் அவர் காலத்தே வாழ்ந்தவன் என்று கூறுவதிற் பிழை ஒன்றும் இல்லை. இக் கருத்தை மனத்துட்கொண்டு கீழ்வரும் அடிகளைக் கவனித்தல் வேண்டும். இப் பாடலும் பரணர் பாடியதே! ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் . தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் - வஞ்சி அன்னஎன் நலந்தந்து சென்மே." (அகம்: 396)