பக்கம்:இன்றும் இனியும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 & அ.ச. ஞானசம்பந்தன் ஆரிய மன்னர்மேல் படையெடுத்துச் சென்று, அவரை வென்று, இமயமலையில் விற்கொடியைப் பொறித்து மீண்ட ஒரு சேரனைக் குறிக்கின்றது இப் பாடல். அவனுடைய ஊர், வஞ்சி என்றும் குறிக்கிறது; இத்தகைய பெருவீரன் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது பரணர்பாடிய பாட்டேயாகும். இவரால் பதிற்றுப் பத்துப் பாடப்பட்டிருப்பின், அப்பாடல் குறிக்கும் குட்டுவன் இச் செயலைச் செய்யதிருப்பின், இதனைப் பரணர் ஆண்டுக் கூறி இராரா? குட்டுவன் இச் செயலைச் செய்யவில்லையாயின் இதனை யார் செய்தனர்? குட்டுவன் தந்தை என்று பதிற்றுப் பத்தின் பதிகம் கூறும் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் நிகழ்த்திய பெரு வீரச்செயல் என்றேனும் கூறலாமா? 13. உயர்வு நவிற்சி சேரலாதனைப்பற்றிக் குமட்டுர்க் கண்ணனார் என்ற புலவர் பாடியனவாகப் பத்துப் பாடல்கள் இரண்டாம் பத்தில் அமைந்துள்ளன. ஆனால், அப் பத்துப் பாடலுள் யாண்டும் அவன் வடநாடு சென்றதாக ஒரு குறிப்பும் இல்லை. "ஆரியர் துவன்றிய பேரிசை இமயந் தென்னங் குமரியொடு ஆயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே." (பதிற்று. 1) என வரும் அடிகள் உயர்வுநவிற்சி யணியாய் இமய முதல் குமரிவரை ஆண்டான் என்று கூறுகின்றனவே தவிர, அவன் படையெடுப்புப்பற்றி ஒன்றுங் கூறிற்றிலது. இதேபோலக் குட்டுவனைப்பற்றிய ஐந்தாம் பத்து 3ஆம் பாடலும்,