பக்கம்:இன்றும் இனியும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்து 155 "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ஆகத் தென்னங் குமரியொ டாயிடை அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ" (பதிற்று. 43) என்று கூறிச் செல்கிறது. எனவே, அகம் 396ஆம் பாடல் நெடுஞ் சேரலாதனைக் குறிக்கவில்லை என்பதும் வெள்ளிடைமலை. மேலும், இவ்வகப் பாடலில் "பிணித்தோன் வஞ்சியன்ன என வருஞ் சொற்களால் இவ்வரசன் புலவர் காலத்தே வாழ்ந்தவன் என்பதும் நன்கு விளங்கும். 14. பரணர் அல்லர் இவ்வாறாயின், அகநானூறு 896ஆம் பாடலில் பரணர் காலத்து வாழ்ந்த அரசன் ஆரியர் அலறத் தாக்கிய செய்தி யாரைக் குறிக்கும்? யாரைக் குறித்தாலும் பதிற்றுப்பத்தின் இரண்டர்ம் பத்தின் தலைவன் நெடுஞ்சேரலாதனையும், ஐந்தாம் பத்தின் தலைவன் குட்டுவனையும் குறிக்கவில்லை என்பது தெளிவு. அது தெளிவாகவே, ஐந்தாம் பத்தின் ஆசிரியர் பரணர் அல்லர் என்பதும் நன்கு விளங்கும். மற்றொன்றும் நோக்கற்குரியது. இரண்டாம் பத்தில் நெடுஞ்சேரலாதன் புகழ் பாடும்பொழுது அவன் செய்த கடற்போரே பெரிதாகப் பேசப்படு கின்றது. $ "வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல் நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி