பக்கம்:இன்றும் இனியும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அ.ச. ஞானசம்பந்தன் அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு" (பதிற்று. 11) என்று முருகப்பெருமான் செய்த கடற்போரை உவமிக் கின்றார், சேரலாதன் செய்த கடற்போருக்கு. அன்றியும் "நுங்கோ யாரென வினவின் எங்கோ இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச் சென்று கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ் சேர லாதன்" (பதிற்று. 20) என்றும் அவன் புகழ் பேசப்படுகிறது. எனவே, நெடுஞ் சேரலாதன் கடற்போர் செய்தலில் இத்துணைச் சிறந்த வனாயின், அவனை ஒரு புலவன் இவ்வளவு சிறந்த முறையில் பாராட்டியும் பாடினான் எனில், பின் வந்தவர்க்கு இது தெரியாமலா போய்விடும்? ஐந்தாம் பத்தின் தலைவன் குட்டுவனை யார் பாடினாலும் அவன்தான் முதன் முதலில் கடற்போர் புரிந்தவன் என்ற கருத்தில் - "அனைய பண்பின் தானை மன்னர் இனியார் உளரோ முன்னும் இல்லை முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே' - . (பதிற்று. 45) என்று பாடுவதன் நோக்கம் யாது? தந்தை செயலை மகனைப் பாடும் வேகத்தில் மறந்துவிட்டாரா புலவர்? முன்னும் என்ற உம்மையால் பின்னரும் வரப்போவ தில்லை என்று பேசும் அளவிற்குக் குட்டுவனிடம்