பக்கம்:இன்றும் இனியும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அ.ச. ஞானசம்பந்தன் சக்கரவர்த்தித் திருக் குமாரனின் கண்களை நாம் காணுமாறு செய்கிறான். பங்கயக் கண்கள் அல்லது கமலம் போன்ற கண்கள் என்று கூறினால், அக் கமலம், விரிதல், மலர்தல், கூம்புதல், வாடுதல் ஆகிய பல நிலைகளுக்கும் உட்பட்டதன்றோ? எனவே, இராமபிரானுடைய கண்கள் எந்த நிலையிலுள்ள தாமரையை ஒத்து இருந்தன என்று ஐயப்படுபவர்களுக்கு அவர்கள் ஐயப்பாட்டைப் போக்குபவன் போலச் 'சிரித்த பங்கயம் என்று கவிஞன் கூறுகிறான். இந்தச் சொற்களை கூறிய உடனேயே புதிதாக மலர்ச்சி அடைந்த தாமரை நம் கண்முன் காட்சி அளிக்கின்றது. எனவே, இராமனுடைய கண்களின் மலர்ந்த, மகிழ்ச்சியுடன் கூடிய நிலை நினைவுக்கு வருகிறது. r சிற்சில சந்தர்ப்பங்களில் இவ்வளவு சிறப்புடைய உவமையும் இதனோடு தொடர்புடைய உருவகமும் கவிஞனின் மனத்தில் எண்ணிய கருத்தை முழுவதும் வெளிப்படுத்த முடியாமற்போவதும் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில், மொழிக்கு இயற்கையாக உள்ள, கருத்தை வெளிப்படுத்த முடியாத குறை பாட்டை எண்ணிக் கவிஞனே வருந்துகின்றான். அவனால் செய்யத்தக்கது ஒன்றுமில்லை என்று கண்டபொழுது கையை விரிப்பது தவிர, அவன் செய்யத் தக்கது ஒன்றும் இல்லை. கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் கூட இதற்கு இலக்காகிவிடுகின்றான். இலக்குவனாம் தம்பியோடும், மிதிலைப் பொன் னாகிய சானகியோடும் இராமன் காட்டில் நடந்து செல்கின்ற காட்சியை வருணிக்கத் தொடங்கு கின்றான் கவிஞன். மாலை நேர வெயில் இராமனுடைய நீல மேனியில் பட்டுத் தெறிக்கின்ற